கடந்த 2018-ம் ஆண்டு முதல் கேரளாவில் நிபா வைரஸ் பரவ தொடங்கியது. இதுவரை அம்மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) படி, நிபா வைரஸ் கோவிட்டை விட ஆபத்தானது.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 2-3 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழப்பார்கள். ஆனால் 40-70 சதவீதம் பேர் நிபா வைரஸால் உயிரிழந்து வருகின்றனர். மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஐசிஎம்ஆர் டிஜி ராஜீவ் பால் தெரிவித்தார்.
