இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடத்திய சோதனையில் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவை எப்படி உருவானது என்பதற்கு தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள எலக்ட்ரான்கள் காரணமாக நிலவில் தண்ணீர் இருப்பதாக ஹவாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இது அடையாளம் காணப்பட்டது என்று ஹவாய் பல்கலைக்கழக விஞ்ஞானி கூறினார்.