இந்தியாவில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு இது தொடர்பாக பல்வேறு சட்டங்களை இயற்றினாலும் சில காமப் கொடூரர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து விடுகிறார்கள். இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த புதிய சட்டம் மாநிலத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல் பிற குற்றத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் அதிகபட்சம் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நான்கு லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.