இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வணிக சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்து 1695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் மாநில அரசின் முதலமைச்சர் லட்லி பஜ்னா யோஜனா வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் 450 ரூபாய்க்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்று அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த தொகை போக மீதமுள்ள தொகையை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 1ஆம் தேதி முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.