டெல்லியின் துவாரகா, மோகன் கார்டன் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்திலிருந்து, 16 குடும்பங்களை டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள் அனில் மஹ்லா தனது உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாத்துள்ளார்.
இரவு 9:40 மணியளவில் ஒரு வீட்டின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்தது குறித்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்த நிலையில், தீயணைப்புப் படை அல்லது மூத்த அதிகாரிகள் வருவதற்கு முன்பே பீட் பணியில் இருந்த கான்ஸ்டபிள் அனில் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
In the dead of night, a fire threatened the lives of sixteen families in a Mohan Garden residential building.
At around 9:39 PM, a PCR call brought the danger to light — a gas cylinder had caught fire in a four-storey building. Panic could have taken over, but bravery stepped… pic.twitter.com/VVt0NIRgdF
— The Better India (@thebetterindia) December 24, 2025
“>
கட்டிடம் முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்து, குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது சவாலாக இருந்த சூழலில், எரியும் சிலிண்டர் வெடித்தால் ஒட்டுமொத்த கட்டிடமே சிதையும் அபாயம் இருப்பதை உணர்ந்த அவர், தீப்பிழம்புகளுக்கு நடுவே சமையலறைக்குள் புகுந்து எரியும் சிலிண்டரைத் தனது கைகளால் வெளியே இழுத்துச் சென்றார். அவரது இந்தத் துரிதமான மற்றும் துணிச்சலான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், காவலர் அனில் மஹ்லாவின் வீரத்தைப் பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
