உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மேக்னெட்டா மாலிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அரங்கேறியது. இதற்காக அந்த மால் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாலுக்குள் திடீரென ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அடித்து சேதப்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு முன்னதாகவும் ஒடிசா மாநிலத்தில் தெருவோரத்தில் கிறிஸ்துமஸ் பொருட்களை விற்பனை செய்து வந்த ஏழை வியாபாரிகளை கும்பல் மிரட்டியதும் குறிப்பிடத்தக்கதாகும்.