தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியத் தலைவரும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன், திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் வெற்றி என்ற இலக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்றும், தேர்தலில் டெபாசிட் இழப்பதற்காகத் தாங்கள் வரவில்லை என்றும் செங்கோட்டையன் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு பயணத்திற்குப் பிறகு நடிகர் விஜய் பங்கேற்கவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் என்றும், நாளைக்கே தேர்தல் நடந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய்தான் வருவார் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். ​அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு ஒரு பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளைத் தயாரிப்பது, வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணிக் குறித்த ஆலோசனைகளை அவர் தலைமையில் அக்கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.