மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.