டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வீசி எறிவதால் காட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தன.

இதனைத் தடுக்க அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்தது. அதன் அடிப்படையில், வாடிக்கையாளர்களிடம் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும். பின்னர் காலி பாட்டிலை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைக்கும் போது அந்த ரூ.10 திருப்பித் தரப்படும்.

இந்த புதிய திட்டம்  சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை முதல் செயல்படுத்தப்படுகிறது. பாட்டில்களை திரும்பப் பெறுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும், காட்டு விலங்குகள் பாதுகாப்பாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்பட்டால், மாநிலம் முழுவதும் விரிவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.