மிலாடி நபி பண்டிகையை (செப்டம்பர் 5) முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மது கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள பார்களும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, நாளை எந்தவொரு வகையிலும் மதுபான விற்பனை செய்யக்கூடாது எனவும், இதனை மீறி செயல்படுவோர் மீது – அதாவது மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
