மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாளை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் நாளை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர் மோடி. நாளை காலை 11:15 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்க உள்ளனர்.