நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30, 31 ஆகிய  தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஊழியர்களோடு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருப்பதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்றும், நாளையும் விடுப்பு முடிந்ததுபோக திங்கட்கிழமை முதல் வங்கிகள் வழக்கம்போல இயங்கவுள்ளன.