இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை சிரிக்க வைத்துள்ளது. அந்தக் காணொளியில், ஒரு கூட்டம் மொபைல் கேமராவைப் பயன்படுத்தி வீடியோ எடுப்பதற்காக செல்போனை தரையில் வைத்துவிட்டு, சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த நாய் ஒன்று செல்போனைப் பார்த்துவிட்டு, சரியாக கேமராவின் மீது சிறுநீர் கழித்தது.

இதைப் பார்த்த செல்போனின் உரிமையாளர் பதறியடித்து ஓடி வந்தார், ஆனால் நாய் அப்போதே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரீல்ஸ் எடுக்க நினைத்தவர்களுக்கு இந்த நாய் கொடுத்த எதிர்பாராத திருப்பமானது மிகவும் நகைச்சுவையாக அமைந்தது. இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பலரையும் சிரிக்க வைத்து வருகிறது.