விராட் கோலி 1,144 நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்..

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 3:1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இருக்கும் பர்சபரா ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, கேஎல் ராகுல்  ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (83 ரன்கள்) மற்றும் சுப்மன் கில் (70 ரன்கள்) இருவரும் களமிறங்கி நல்ல துவக்கம் கொடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து விராட் கோலி – ஷ்ரேயஸ் ஐயர்ஜோடி சேர்ந்தனர். பின் ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் தன் பங்குக்கு 39 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதனிடையே கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அதனைத்தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 14 , அக்சர் படேல் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் மறுமுனையில் கோலி அற்புதமாக ஆடி அதிரடி சதத்தை விளாசினார். பின் 49ஆவது ஓவரில் 87 பந்துகளில் (12 பவுண்டரி, 1 சிக்ஸர்) 117 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டமிழந்தார்.இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது. ஷமி 4, சிராஜ் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். தற்போது இலங்கை அணி களமிறங்கி பேட்டிங் ஆடி வருகிறது.

இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு 45 ஆவது சதமாகும். ஒட்டுமொத்தமாக கோலிக்கு இது 73ஆவது சதமாகும். அதேசமயம் உள்நாட்டில் (சொந்த மண்ணில்) சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதனால் சச்சின் சாதனையை சமன் (20 சதம்) செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக இந்திய மண்ணில் விராட் கோலிக்கு இது 9ஆவது சதமாகும். அதேபோல விராட் கோலி 1144 நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். இதனால் சமூகவலைதளங்களில் விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. #ViratKohli? என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

செப்டம்பர் 8, 2022: 1021 நாட்களுக்குப் பிறகு தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்தார் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (துபாய்) ).

டிசம்பர் 10, 2022: 1116 நாட்களுக்குப் பிறகு தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்தார் (வங்கதேசத்திற்கு எதிராக (வங்கதேசம்) ).

ஜனவரி 10, 2023: 1144 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் (இலங்கைக்கு எதிராக (இந்தியா) )

https://twitter.com/VJ_Hafi18/status/1612779853492936704

https://twitter.com/IronMan_1128/status/1612782043431333890