டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துள்ளார். டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார். அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் பேசிய இபிஎஸ், நாம் பிரிந்து இருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என்று கூறியுள்ளார். மேலும் வரும் நாட்களில் அதிமுக பாஜக கூட்டணியில் – குழப்பம் இல்லாமல் செயல்படுவது குறித்து பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷா இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எஸ் பி வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோரும் பங்கு பெற்றுள்ளார்கள். மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் உடன் இருந்தார். இந்த ஆலோசனையானது சுமார் ஐந்து நிமிடங்கள் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைப்பது, தொகுதி பங்கீட்டு விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நாளை பாஜக ஜேபி நட்டாவையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.