நாசாவின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் இன்கிரிட் ஹோன்காலா, தனது சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தின் போது நிகழ்ந்த ‘மரணத்திற்கு அருகிலான அனுபவம்’ குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனது இரண்டு வயதில் நீரில் மூழ்கியபோது, உடல் ரீதியான உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு ஒளிமயமான இடத்திற்குச் சென்றதாக அவர் கூறுகிறார்.
மேலும் அங்கு பயமோ வலியோ இன்றி, மிகுந்த அமைதியையும் நிபந்தனையற்ற அன்பையும் உணர்ந்ததாகத் தெரிவிக்கும் அவர், நாம் வாழும் இந்த பௌதிக உலகம் ஒரு திரையைப் போன்றது என்றும், அதற்குப் பின்னால் ஒரு மகத்தான ஆன்மீகப் பேரண்டம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்றும் விளக்குகிறார்.
இந்த அனுபவம் தனது வாழ்க்கைப் பார்வையையே முற்றிலும் மாற்றிவிட்டதாக டாக்டர் இன்கிரிட் குறிப்பிடுகிறார். மரணம் என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் ஒரு கதவு என்பதை அவர் வலியுறுத்துகிறார். அறிவியல் ரீதியாகப் பல ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும், இந்த ஆன்மீக அனுபவம் அவருக்குள் ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாம் அனைவரும் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச சக்தியுடன் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும், அன்பு மற்றும் விழிப்புணர்வுடன் வாழ்வதே வாழ்வின் உண்மையான நோக்கம் என்றும் அவர் தனது உரையாடலில் தெளிவுபடுத்துகிறார்.
