சமீப நாட்களில் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சில இளைஞர்கள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் சேனல்களிலும் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்துடன் நேரடி தொடர்பில்லாத இந்த இளைஞர்கள், குறைந்த அளவிலான மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் “அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவர்” என யூகித்து வீடியோக்களை வெளியிடுகின்றனர்.
உதாரணமாக, தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வெறும் 204 பேரிடம்தான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. எனினும், அதன் முடிவுகளை 2026 தேர்தல் போல் விளக்கி, தொகுதிவாரியாக யார் வெற்றி பெறுவர் என இவர்கள் கூறியிருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் மக்களிடம் “ 2026ல் யாருக்கு வாக்களிப்பீங்க?” என்று கேட்கப்பட்ட கேள்வி 🎤🗳️
Total Vote Count – 204
1. TVK – 100 Votes 🙏🔥 @TVKVijayHQ
2. DMK – 69 Votes
3.ADMK – 25 Votes
4. Nota – 6 Votes
5. NTK – 4 Votes pic.twitter.com/fFrf46pzws— TVK Vijay Trends (@TVKTrendsVijay) October 21, 2025
“>
குறிப்பாக கரூர் தொகுதியை மையமாகக் கொண்ட இந்த வாக்கெடுப்பில், நான்கு பேர் நாம் தமிழர் கட்சிக்கும், ஆறு பேர் நோட்டாவுக்கும், 25 பேர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், 69 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், 100 பேர் தமிழக வெற்றி கழகத்துக்கும் வாக்களித்துள்ளதாக காணப்படுகிறது.
இதன் அடிப்படையில், “கரூர் மக்களின் ஆதரவு 2026 இல் தமிழக வெற்றி கழகத்திற்கே இருக்கும்” என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான வாக்கெடுப்பாக இருந்தாலும், இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
