கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றி கழகம் பேசாமல் இருந்ததற்குப் பின்னால் உள்ள அரசியல் காரணங்களை விளக்கும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல செய்தி சேனல் ஒன்றில் நடந்த அரசியல் விவாதத்தில் ஒரு அரசியல் விமர்சகர் கூறிய கருத்தே இப்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

“கரூர் துயர சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 நாட்களாகியும் தமிழக வெற்றி கழகம் இதுகுறித்து பெரிதாக எதுவும் பேசவில்லை. ஆனால் அவர்கள் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி — நாம் தினமும் அவர்களைப் பற்றியே பேசுகிறோம்” என அவர் குறிப்பிடுகிறார்.

“>

அவர் மேலும் கூறியதாவது: “வெற்றி கழகம் பேசாமலே இருந்தாலும், அரசியல் வட்டாரங்களில், ஊடகங்களில், சமூக வலைதளங்களில் அவர்கள் பெயர் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?, 2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தை புறக்கணித்து எதுவும் நடக்க முடியாது என்பதற்கான சாட்சியே இது. அவர்கள் ஆதரிக்கப்படுகிறார்களா, விமர்சிக்கப்படுகிறார்களா என்பது முக்கியமல்ல — அவர்கள் அரசியல் மையத்தில் இருப்பது மட்டுமே முக்கியம்.” என அவர் கூறிய இந்த விளக்கம், விஜய் ரசிகர்கள் மற்றும் வெற்றி கழக ஆதரவாளர்களால் பெரிதும் பகிரப்பட்டு, தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.