பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், நடிகர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேசியதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் அவர், “விஜய் அவர்களுடன் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பல விஷயங்கள் குறித்து திறந்த மனத்துடன் அவர் பேசினார் ” என கூறியுள்ளார். இந்த உரையாடலின் போது, “நீங்கள் 1000 கோடி மதிப்புள்ள திரைப்பட வணிகத்தை விட்டு அரசியலுக்கு ஏன் வருகிறீர்கள்?” என்று நான் நேரடியாக கேட்டேன் என்றும், அதற்கு விஜய் சிரித்தபடி, “இந்த மக்களுக்காக எதாவது செய்யணும் என மனசுக்குள் ஒரு எண்ணம் வந்திருக்கு” என்று பதில் அளித்தார் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “விஜயின் பேச்சிலும் உட்கருத்திலும் ஒரு உண்மையான சமூகப் பணி செய்யும் ஆர்வம் தெரிந்தது. அவர் சினிமாவைத் தாண்டி அரசியலில் மக்களுக்காக மாற்றம் கொண்டு வர விரும்புகிறார் என்ற உணர்வு தெளிவாக இருந்தது” என கூறியுள்ளார். சவுக்கு சங்கர் கூறிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“>