தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த “பாட்டிலுக்கு பத்து ரூபாய்” என்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 15 ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆட்சிகள் மாறியபோதும், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் ரூபாய் பத்து வாங்கும் நடைமுறை நீடித்திருந்தது. ஆனால், சமீபத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் பாடிய “பாட்டிலுக்கு பத்து ரூபாய்” என்ற பாடல் பெரும் சமூக கவனத்தை ஈர்த்தது. வெறும் பத்து வினாடிகள் கூட அவர் பாடலைப் பாடாதபோதும், அந்த வரிகள் மக்களிடையே வேகமாக பரவி, பலரையும் விழிப்புணர்வுடன் கேள்வி கேட்க வைத்தது.

“>

அந்த பாடலின் தாக்கத்தால் பல டாஸ்மாக் கடைகளில் பொதுமக்கள் நேரடியாக “பாட்டிலுக்கு ஏன் பத்து ரூபாய் வசூலிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி, அதை வீடியோவாக பதிவு செய்து பகிரத் தொடங்கினர். இதன் பின்னர் செய்தித்தாள்களிலும் சமூக வலைதளங்களிலும் இது பரவலாக வெளிப்பட, “இனி பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கப்பட மாட்டாது” என கூறப்பட்டு . 15 வருடங்களாக நிலைத்திருந்த இந்த பிரச்சனையை, ஒரு பாடல் வரியால் விஜய் முடிவு செய்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.