விஜய் எனக்கு போட்டி என்று நான் நினைத்தால் எனக்கு அது மரியாதை இல்ல, எனக்கு கௌரவம் இல்ல, விஜய்க்கு ரஜினிகாந்த் போட்டியின்னு சொன்னா அவருக்கும் மரியாதை இல்லை, ரசிகர்கள் தயவு செஞ்சு ரெண்டு பேரையும் அப்படி கம்பேர் பண்ணாதீங்க என நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காக்கா கழுகு கதையெல்லாம் வேண்டாம்.  ஜெயிலர் பட  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய காக்கா கழுகு கதை நடிகர் விஜய்க்கு எதிராக தான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்திகளுக்கு லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.