கனடாவில் நடந்த வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வான்கூவர் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் கருப்பு கரடி ஒன்று புகுந்தது. அந்த நேரத்தில், வீட்டில் இருந்த 5 பவுண்ட் எடையுள்ள சிறிய போமெரேனியன் இன நாய் “ஸ்கவுட்” தனது உரிமையாளரின் வீட்டைக் காப்பாற்றும் விதமாக, அந்த கரடியை விரட்டி அடித்த காட்சி தற்போது பரவலாக பேசப்படுகிறது.
நாய் உரிமையாளர் கெய்லா கிளைன் தெரிவித்ததாவது: “அந்த நேரத்தில் வீட்டில் இசை போட்டிருந்ததால் கரடி உள்ளே வந்ததை நான் கவனிக்கவில்லை . அது சமையலறையில் சென்று, ஸ்கவுட்டின் உணவைத் தின்றது. அதை கேட்டு ஸ்கவுட் விரைந்து சென்று, கரடியை வீட்டிலிருந்து தைரியமாக வெளியேற்றியதோடு மட்டுமின்றி, முற்றிலும் எங்கள் வீட்டின் எல்லைக்குப் புறம்பாக விரட்டி அடித்தது” என்றார். மேலும், “ஸ்கவுட் எப்போதும் தன்னுடைய ஆதிக்கத்தை காட்ட விரும்பும் தன்மை கொண்டது. நாங்கள் அதை ‘ஆல்பா டாக்’ என்று அழைப்போம்” என்றும் கூறினார்.
NEW: Tiny Pomeranian chases down a black bear out of its home after the bear broke in and started wandering around.
The 5 pound Pomeranian named ‘Scout’ was seen coming to the rescue to get the bear out of the home in Vancouver, Canada.
“I had music playing (and) didn’t hear… pic.twitter.com/MMokYDifmT
— Collin Rugg (@CollinRugg) August 9, 2025
“>
வீட்டுக்குள் புகுந்த கரடியைச் சிறிய நாய் விரட்டி அடிக்கும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “சிறிய உடல், பெரிய தைரியம்” என்பதற்கான உதாரணமாக இந்த சம்பவம் குறிப்பிடப்படுகிறது. பலர், ஸ்கவுட்டின் தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டி வருகின்றனர்.
