கேடி படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தமன்னா. அதனை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுடன் வியாபாரி படத்தில் நடித்திருப்பார். அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தது. அதனையடுத்து தனுஷின் படிக்காதவன் படத்தில் நடித்தார். பையா, சிறுத்தை, தில்லாலங்கடி என தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களின் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இந்த நிலையில் தமன்னா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தான் நடித்ததிலேயே மோசமான படம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது விஜய் நடிப்பில் வெளியான சுறா படத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் தன்னுடைய கதாபாத்திரம் ரொம்பவே சுமாராக இருக்கும். நடிக்கும் போதே கணித்துவிட்டேன் இந்த படம் பெரிய அளவில் ஓடாது என்று. அப்படி ஒரு அனுபவத்தை நடிக்கும் போது அந்த படம் எனக்கு கொடுத்தது. அதனை தொடர்ந்து இதுவரை அது போன்ற ஒரு கதையை நான் தேர்வு செய்யவில்லை என்று கூறியுள்ளார். தற்போது  தமன்னாவின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.