உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் தன்னையும் க்ரிஷ் போன்று ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைத்துக் கொண்டு தனது பள்ளியில் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். க்ரிஷ் படத்தைப் பார்த்துவிட்டு சிறுவன் இத்தகைய விபரீத சம்பவத்தை நிகழ்த்தியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.