சமூக ஊடகங்களில் இப்போதிருக்கும் ட்ரெண்டிங் வீடியோவோ ஒரு வழக்கமான சாலை விபத்தல்ல! ஒரு மின் ரிக்‌ஷா மற்றும் இரண்டு ரிக்‌ஷாக்கள் ஒன்று சேர்ந்து நேர்த்தியான விதத்தில் மோதும் இந்த வீடியோ, மக்கள் சிரிக்க  வைக்கும் வகையில் வேகமாக வைரலாகி வருகிறது. “இவ்வளவு நேரம் நடந்தது காமெடி விபத்தா?” என்ற வண்ணம் பலரும் தங்களது ஆச்சரியத்தையும் நகைச்சுவையையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த 12 வினாடிகள் கொண்ட வீடியோவில், சாலையோரத்தில் நின்றிருந்த பைக் ஓட்டுநரின் பக்கமாக மின் ரிக்‌ஷா ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வருகிறது. அது நேரே வந்த ரிக்‌ஷாவில் மோத, அதே நேரத்தில் பின்னால் இருந்த மற்றொரு ரிக்‌ஷா அதில் மோதுகிறது.

மூவரும் ஒரே நேரத்தில்மோதி  கீழே விழ, பசங்க திரும்ப திரும்ப  போட்டு பார்த்த மாதிரி அந்த வீடியோவை மக்கள் லூப்புல பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இருப்பினும் இதில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

வீடியோவை Twitter/X-ல் பகிர்ந்துள்ள @mktyaggi, “இவ்வளவு ஹை குவாலிட்டி விபத்தை பார்த்திருக்கீங்களா?” என வேடிக்கையாக கேட்க, யூசர்கள் பலரும் அதற்கு கமெண்ட் பொழிந்துள்ளனர். “டெல்லியில் மின் ரிக்‌ஷா ஓட்டுனர்கள் வேற லெவல் டெரரிஸ்ட்” என்று ஒருவர் பதிவு செய்திருப்பதோடு, “யமராஜ் பேனா மறந்து வச்சிட்டு நேரில வந்துட்டாரு போல!” என மற்றொருவர் கமெண்ட் போட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் இந்த சாலை விபத்து வீடியோ…ஒரு எச்சரிக்கை ’ மோதல் தான்! சாலைகளில் கவனம் முக்கியம் என்பதை தெளிவுபடுத்துகிறது.