தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பலரும் சொந்தம் கொண்டாடி சொத்தில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இது தொடர்பாக அவ்வப்போது நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படும் நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த ஒரு பெண் தான் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் மகள் எனக்கூறி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கேரளாவைச் சேர்ந்த சுனிதா என்ற 37 வயது பெண் 1980 களில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்கள் இருவருக்கும் தான் பிறந்ததாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதோடு டிஎன்ஏ பரிசோதனைக்கும் தான் ரெடியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதோடு ஜெயலலிதா மட்டும் எம்ஜிஆர் தான் தன்னுடைய பெற்றோர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும் அந்த பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதோடு அவரது சொத்தில் தனக்கும் மகள் என்ற உரிமையில் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இது தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, இது ஒரு தீவிரமான மரபு உரிமை விவகாரம். இதை எளிதில் தள்ளுபடி செய்ய முடியாது. இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் விசாரணை மேற்கொள்வோம் என்றார்.

மேலும் இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த சுனிதா கூறும்போது நான் போயஸ் கார்டனுக்கு பலமுறை சென்று அம்மாவை சந்தித்துள்ளேன். ஆனால் சில காரணங்களால் ரகசியமாக வளர்க்கப்பட்டேன். மேலும் எனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்தால் உண்மை தெரியவரும் என்று கூறினார். ஆனால் இதனை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இது அவரது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.