சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா பூங்கா முன்பாக கலைஞர் கருணாநிதியின் 16 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த வெண்கல சிலையில் திடீரென மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையின் கால் மற்றும் மார்பு பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் கருப்பு பெயிண்ட் ஊற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக அந்த பகுதிக்கு திமுகவினர் கூட்டமாக கூட தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது தொடர்பாக போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
