தமிழக பாஜாக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் (Censor) பெறுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது: “நல்ல நடிகர்கள் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு திரைப்படம் என்பது நடிகர்களால் மட்டுமே உருவாவது கிடையாது; அதன் பின்னணியில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.

தற்போது அந்தப் படத்திற்கு சென்சார் தரப்பில் ஏதோ சிக்கல் இருப்பதாகச் சொல்கிறார்கள். மறு தணிக்கை எனப் பல்வேறு கட்டங்களைத் தாண்டி இந்த விவகாரம் சென்றுகொண்டிருக்கிறது. நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதனாகத்தான் சென்சார் போர்டு மற்றும் படக்குழுவினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதும் நீதிமன்றங்கள் இருக்கின்றன. தணிக்கைக் குழுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழிவகை உள்ளது. பல திரைப்படங்கள் இத்தகைய சவால்களைக் கடந்துதான் திரைக்கு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.