நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரயில்வே துறை இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலைகளுக்காகவும் தனிப்பட்ட காரணத்திற்காகவும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பொதுவாகவே ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்களும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதன்படி நம் நாட்டில் முதல் ரயில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் மும்பையில் உள்ள போரிப்பந்தர் மற்றும் தானே இடையே 34 கிலோ மீட்டர் ஓடியதாக ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன