2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி மூலமாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் நாடாளுமன்றத் தேர்தலில் செலவுக்காக தமிழக அரசிடம் 750 கோடி தொகை கேட்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்றும், சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.