தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கியுள்ளது. ஓசூர் மற்றும் பொம்ம சந்திரா இடையே பெருந்திறல் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை ஓசூர் வரை நீட்டிப்பதற்கு முன்மொழிந்து மாநில தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. ஓசூரில் இருந்து பெங்களூருக்கு நாள்தோறும் பல்லாயிரம் பேர் வேலைக்காக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இது ஓசூர் பெங்களூருவை இணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகின்றது.