முழு நிலவு வழக்கத்தை விட பிரகாசமாகவும் பூமிக்கு நெருக்கமாகவும் இருப்பதே சூப்பர் மூன் எனப்படுகிறது. சந்திரனின் சுற்றுப்பாதை பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இந்த வருடத்தின் இரண்டாவது சூப்பர் மூன் இன்று தோன்றுகிறது. இதனை இந்தியாவில் காணலாம் எனவும் ஆகஸ்ட் 30ஆம் தேதி மற்றொரு சூப்பர் மூணை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மூன் வழக்கமான முழு நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் இருக்கும்.