நேபாள நாட்டில் சமூக வலைதள கணக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டதால் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறி பெரும் கலவரம் ஏற்பட்டதில் 19 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த நாட்டில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி  வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் நேபாள நாட்டில் அரங்கேறிய நிலையில் அந்த சம்பவத்திற்கு பிறகு ஒருவர் அதற்கு முன்பாக நின்று ராப் பாடலுக்கு திடீரென நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்தார்.

 

அவர் அந்தப் பற்றி எரியும் வன்முறைக்கு மத்தியிலும் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நபர் நாடாளுமன்றத்தை எரித்த பிறகு டிக் டாக்கில் இப்படி ஒரு வீடியோ வைரலானது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் நியாயமற்ற நேரத்தில் கொண்டாடுவது முட்டாள்தனத்தின் உச்சம் என பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.