ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகளின் பொது விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை குறித்த விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது . அதாவது ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, ஈத் திருநாள் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் என்று பல வங்கி விடுமுறை நாட்கள் வருவதால் இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளும் வார இறுதி நாட்கள் உட்பட வரும் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால் ஏப்ரல் மாதத்தில் அந்தந்த வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்ப தங்கள் பணிகளை திட்டமிட்டு முன்னரே முடித்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஒவ்வொரு மாதத்திலும் வங்கி விடுமுறை இந்திய ரிசர்வ் வங்கி அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.