உலகச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதனை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் சரிந்தால் அதற்கேற்ப இந்தியாவிலும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் அதனை ஏற்று பல சிறிய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது MRP விலையை 6% வரை குறைத்திருக்கிறார்கள். முக்கியமாக இந்தியாவின் முக்கிய எண்ணெய் விற்பனையாளர்களான Fortune, லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்துள்ளது. தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலையை குறைக்க இருக்கின்றன.