பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்தியது. இதில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பயணம் செய்த 1,500- க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெட்டியில் பயணித்த 6,300 -க்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டனர்.

இந்நிலையில் ரயில்வே சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையாக ரூ.6.71 லட்சம் மற்றும் ரூ.8.68 லட்சம் என மொத்தமாக 15.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் பயணிகளுக்கு தொந்தரவு செய்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டது போன்ற செயல்களில் ஈடுபட்ட 1,200-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்தும் ரூ.1.28 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே அமைச்சகம் இந்த தகவலை  தெரிவித்துள்ளது.