இன்றைய காலகட்டத்தில் பலர் டிஜிட்டல் முறையில் கடன் வாங்குகிறார்கள். ஒரு போன் கால் மூலம் டிஜிட்டல் முறையில் உடனடியாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் கடன் செலுத்தப்படுகிறது. இப்படி சுலபமான முறையில் கடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் கடன் வாங்கிவிட்டு பின்னர் சிரமப்படுகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் முறையில் கடன் வாங்குவதற்கு முன்பாக உங்களுக்கு கடன் வழங்கும் வங்கி நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களின் மொத்த விவரம் மற்றும் விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கடன் வாங்க வேண்டும். அந்த வகையில் டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதற்கு முன்பு என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி, முதலில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை மதிப்பீடு செய்து விட்டு அதற்கு தகுந்தார் போன்று கடன் வாங்க வேண்டும். உங்களுடைய செலவு மற்றும் வருமானங்கள் குறித்து கணக்கீடு செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் உங்களுடைய செலவு மற்றும் வருமானம் போக கடனுக்கு செலுத்த வேண்டிய பணமும் உங்கள் கையில் இருக்கிறதா என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். கடன் வாங்குவதற்கு முன்பாக கிரெடிட் ஸ்கோர் நல்ல முறையில் இருக்க வேண்டும். ஏனெனில் கடனை செலுத்த முடியாத போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட்டால் மறுமுறை கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும். அதன் பிறகு முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் செலுத்தும் தவணைத்தொகை உங்களுடைய மொத்த வருமானத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது.

ஒருவேளை 40 சதவீதத்திற்கும் மேல் தவணைத்தொகை இருந்தால் உங்களுடைய மொத்த வருமானமும் கடனை செலுத்துவதற்கே காலியாகிவிடும். நீங்கள் கடன் பெறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் மிகவும் கவனமான முறையில் இருக்க வேண்டும். ஏனெனில் சில தனியார் நிதி நிறுவனங்கள் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தவறான முறையில் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து தான் கடன் பெற வேண்டும்.