கடந்த வெள்ளியன்று ஒடிசாவில் நடந்த ரயில்கள் கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் UPI பேமெண்ட் செயலியான Paytm தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது மிக கொடூரமான ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

அதன் செயலி மூலம் பயனர்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு இணையான தொகையை ஒடிசா முதல்வர் நிவாரண நிதிக்கு டெபாசிட் செய்வதாக அறிவித்துள்ளது.  மேலும், நன்கொடை அளித்தவர்கள் பிரிவு 80G இன் கீழ் வரி விலக்கு பெறலாம் மற்றும் ஆர்டர்கள் மற்றும் முன்பதிவு பிரிவில் இருந்து ரசீதுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.