திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவில் உள்ளவர்கள் தன்னிடம் பேசி வருகிறார்கள். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறினார்.

மேலும் எந்த சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ள போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவேன் என கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.