நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “தக் லைஃப்” படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன், நேற்று சென்னை திரும்பியுள்ளார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறன் .

இப்போதைக்கு அதுதான் நல்ல செய்தி. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்’ என்றார். மேலும் திமுக கூட்டணியில் இணைந்து, மநீம கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக டார்ச் லைட் அல்லது காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.