ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி உட்பட 39 பேர் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பி.வில்சன் உள்ளிட்ட 12 பேர் நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.