நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு இனி நாடாளுமன்ற வளாகத்தினுள் அனுமதி இல்லை. மத்திய அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு மட்டுமே வளாகத்தில் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.