இந்திய தயாரிப்பு இருமல் சிரப் மருந்து கலவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மருந்த தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் 54 இந்திய உற்பத்தியாளர்களின் ஆறு சதவீதம் இருமல் சிரப் மருந்துகள் ஏற்றுமதிக்கான தர சோதனையில் தோல்வி அடைந்தன. எனவே அதில் பயன்படுத்தப்பட்ட புரோபைலில் கிலைகால் அளவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.