இந்தியாவில் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருந்தாலும் மத்திய அரசு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு மக்களவையில் கூறியுள்ளது.

முதல் முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக முந்தைய ஓய்வூதிய முறைக்கு திரும்புவதை நிராகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தால் நிதி சுமை அதிகரிக்கும் எனவும் இதனால் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டம் அத்தகைய நிலைமையை அனுமதிக்காது என்றும் நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.