நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலை சீசன் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கலை கட்டுகின்றது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருந்து ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்த வருடம் அளவுக்கு அதிகமான கூட்டம் கோவிலில் அலை மோதுவதால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் நலனுக்காக கூடுதல் ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி கச்சேகுடா மற்றும் கொல்லம் இடையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கச்சேகுடாவில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில் டிசம்பர் 18, 25, ஜனவரி 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் மறு மார்க்கமாக கொல்லத்திலிருந்து டிசம்பர் 20, 27, ஜனவரி 3, 11,17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 11.45 மணிக்கு கச்சேகுடாவில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 5.30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலில் ஏசி முதல் வகுப்பு, 2 ஏசி மற்றும் மூன்று ஏசி, ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் ஜெனரல் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.