அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், “அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்களாகிய நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வீர்களா?” என்று செய்தியாளர்கள் தரப்பிலிருந்து காரசாரமான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குத் தற்போதைய மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் மிக நெகிழ்ச்சியாகவும் அதிரடியாகவும் பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “அரசுத் துறையை நாங்களே நம்பவில்லை என்றால் அப்புறம் பொதுமக்கள் யார்தான் நம்புவார்கள்? ஏழை, எளிய மக்களுக்காகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன. எனவே, எங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் கண்டிப்பாக அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக் கொள்வோம்” என ஓப்பனாகப் பேட்டி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி மற்றும் நம்பிக்கையான பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.
