கெனிஷா விவகாரத்தில் ஆர்த்தி குடும்பத்தினர் 25 பேரை வைத்து தன் மீது சைபர் அட்டாக் நடத்துவதாக நடிகர் ரவி மோகன் வைத்த குற்றச்சாட்டுக்கு அவரது மாமியார் சுஜாதா அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். “யார் சைபர் புல்லிங் செய்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நாங்களே சைபர் கிரைமில் புகார் அளிக்கப் போகிறோம்; யார் குற்றவாளி என்று சட்டம் கண்டுபிடிக்கும்” என்று சுஜாதா ஓப்பனாக சவால் விட்டுள்ளார். ரவி மோகனின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள மாமியாரின் இந்த அதிரடி முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தன் மகள் ஆர்த்தி தரப்பு மீது தேவையில்லாமல் பழி சுமத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும், உண்மையை சட்டம் வெளிக்கொண்டு வரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே ரவி மோகன் தரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த நிலையில், இப்போது மாமியார் சுஜாதா நேரடியாக சைபர் கிரைம் போலீசுக்கே போகப்போவதாக அறிவித்திருப்பது இந்த விவாகரத்து வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
