நடிகர் சூரி ஒவ்வொரு சினிமா மேடைகளிலும் தனது ஆரம்பகால கஷ்டங்களையும், பழைய நண்பர்களையும் பற்றி உருக்கமாகப் பேசுவது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான் என்று ‘பூ காய் கனி’ பட இயக்குநர் வெற்றிவீரன் அதிரடியாகச் சாடியுள்ளார். சூரி மேடைகளில் பேசுவதைப் பார்த்து மக்கள் அவர் பழைய நண்பர்களை மறக்காத நல்லவர் என்று நம்புகிறார்கள்; ஆனால் உண்மையில் அவர் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை என்று புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
மேலும், நண்பர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே சூரிக்கு இல்லை என்றும், மேடைகளில் மட்டும் பேசி நல்ல மனிதர் என்ற மாயையை மக்கள் மத்தியில் அவர் உருவாக்கி வருகிறார் என்றும் வெற்றிவீரன் குற்றம் சாட்டியுள்ளார். எப்போதும் எளிமையானவர் என்ற இமேஜில் இருக்கும் நடிகர் சூரியின் நிஜ முகம் இதுதான் என ஆரம்பகால நண்பரே அம்பலப்படுத்தியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
