திரையுலகில் எப்போதும் எளிமையானவர், பழசை மறக்காதவர் என்ற நல்ல இமேஜோடு வலம் வரும் நடிகர் சூரி மீது ‘பூ காய் கனி’ பட இயக்குநர் வெற்றிவீரன் பயங்கரமான துரோகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “சூரி செய்தது நேரடியான துரோகம்; கூட இருந்த நண்பர்களில் ஒருவரைக் கூட அவர் கை தூக்கி விடவில்லை” என்று அவர் சூரியை மிகக் கடுமையாக வெளுத்து வாங்கியுள்ளார்.
மேலும் பேசிய இயக்குநர் வெற்றிவீரன், “இனிமேல் பழசை மறக்கவில்லை, அப்படி நடந்துச்சு இப்படி நடந்துச்சு என்று சூரி மேடைகளில் பேசவே கூடாது” என்று சாடியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே நல்ல இமேஜில் இருந்த நடிகர் சூரி மீது, சக இயக்குநர் ஒருவரே இப்படி ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
