நடிகர் விஜயகுமாரின் மகளும், பிரபல நடிகையுமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமா விமர்சகர்களை மிகக் கடுமையான தொனியில் சாடியுள்ளார். “இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் ஓபன் செய்யலாம், யார் வேண்டுமானாலும் ஒரு படத்தைப் பற்றித் தவறாகப் பேசலாம்; அந்த நெகட்டிவ் விமர்சனங்களைச் சொல்லிச் சம்பாதிக்கிறீர்களே, கோடிகோடியாகப் பணம் போட்டுப் படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு இதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு வரும் என்ற கவலை இருக்கிறதா?
அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு எப்படி உங்களால் இப்படிச் செய்ய முடிகிறது?” என்று வனிதா மிகுந்த கோபத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் பேசிய வனிதா, தான் பர்சனலாக சில விஷயங்களைப் பற்றி எங்கும் பேசுவதில்லை என்றும், தான் எதனால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் தான் இப்போது இருப்பதாகக் கூறி ஒரு புதிய சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.
வனிதா ஓப்பனாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், நெகட்டிவ் விமர்சனம் பண்ணி சம்பாதிப்பவர்களை அவர் கோபமாகச் சாடியது, பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறனைத்தான் என்று நெட்டிசன்கள் இப்போதே சோசியல் மீடியாவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளனர்.
